PUM School

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குருங்குளம்


         
      தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டும் உள்ள பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகளில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்றவை உள்ளன. இப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியப் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை   ஆசிரியர்களாகவும்,  கல்வியியல்   பட்டப்படிப்பில்   தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.


     ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குருங்குளம் தமிழ்நாடு மாநிலம் திருவாரூர்  மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.இப்பள்ளியில் 1 முதல் 8 வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. குருங்குளம் ஊராட்சியில் இப்பள்ளி அமையப்பெற்றுள்ளது.


❄ இப்பள்ளியில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

❄ நன்னிலம் வட்டார நடுநிலை பள்ளிகளில் இந்த பள்ளி அதிக                            கல்விப்புரவலர்கள் உள்ள பள்ளியாக  முதலிடத்தில் உள்ளது.
 
❄ இந்த பள்ளியில் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் அன்று                        குழந்தைங்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன .

❄ ஒவ்வொரு வருடமும் மாணவர்களை சுற்றுலா அழைத்துசெல்கின்றனர்.