Sri Meenakshi Sametha Sundareshwarar Temple

 ஸ்ரீ மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோவில் 


       

சிவன்

          சிவன்  இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விட்டுணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார்.சிவனின் இடப்புறத்திலிருந்து விட்டுணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர் கூறுகின்றார்.பிரம்மன் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிநிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான உருத்திரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகின்றது.


✤ இக்கோவில் குருங்குளம் கிராமத்தில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று .

✤ இக்கோவிலானது வடக்கு தெருவில் தட்டான் குளத்தின் அருகே                           அமைந்துள்ளது.

✤ இக்கோவிலில் மகா சிவராத்திரி அன்று மிக சிறப்பாக                                             கொண்டாடப்படும்.

✤ மாரியம்மன் கோவில் தீமிதி அன்று இங்கு வந்து இறைவனிடம் அனுமதி       கேட்க்கும் நிகழ்வு நடைபெறும், அப்பொழுது நமக்கு கருடர் வந்து                     வானத்தில் வட்டமிட்டு  காட்சியளிப்பார் .

✤ கார்த்திகை அன்றும் இங்கு மிக சிறப்பாக நடைபெறும்.

✤ மீனாட்சி அம்மனின் வளைகாப்பு விழாவை பெண்கள் இணைந்து மிக         பிரம்மாந்தமாக நடத்துவார்கள்.

✤ விளக்கு பூஜையும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.