Ration Shop

நியாய விலைக் கடை


நியாய விலைக் கடை (Ration Shop)

❄நியாய விலைக் கடை (Ration Shop) குருங்குளத்தில் பெருமாள்                     கோவில் குளத்தின் வடது கரையில் அமைந்துள்ளது. 

❄ இதன் அருகிலேயே நூலகம்,பள்ளி கூடம்,ஊராட்சி அலுவலகம் மற்றும்   கிராம நிர்வாக அலுவலகம்  போன்றவை அமைந்துள்ளது .


       நியாய விலைக் கடை (Public distribution system) என்பது பொது விநியோக முறையின் கீழ் இந்திய அரசாலும், மாநில அரசாலும் நிர்வகிக்கப்படும் ஒரு நுகர்வு பொருள் விற்பனை மையமாகும். இதுவரை 4.99 லட்சம் நியாய விலைக் கடைகள் நாடு முழுவதும் உள்ளன.

     கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப நியாய விலைக் கடைகளை அமைந்துள்ளது. பொதுவாக இந்த நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்குப் பொருள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அரசின் மானியத்தின் மூலமாக குறைந்த விலையில் ஏழை மக்கள் பயனடையும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் இதனை பயன்படுத்த குடும்ப அட்டை அவசியமாகும்.