Pillayar Temple

 பிள்ளையார் கோவில் 


        பிள்ளையார் அல்லது விநாயகர் இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாகக் காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.


✤ இக்கோவில் குருங்குளம் கிராமத்தில் மிக முக்கியமான கோவில்களில்         ஒன்று .

✤ இக்கோவிலானது அக்ரஹாரம் தெருவில் தாமரை  குளத்தின் அருகே             அமைந்துள்ளது.

✤ இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி  அன்று மிக சிறப்பாக                                         கொண்டாடப்படும்.

விநாயகரின் வேறு பெயர்கள்

கணபதி – கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.

ஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.

கஜமுகன் – கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.

விக்னேஸ்வரன் – விக்கினங்களைத் (தர்மவழியில் நிற்பவர்களின் துன்பங்களைத்) தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது அறத்தின் வழியில் வாழ்பவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள் பிள்ளையாரை வணங்கிச் செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.