Kaliyamman Temple

 காளியம்மன் கோவில்


✤ இக்கோவில் குருங்குளம் கிராமத்தில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று .


✤ இக்கோவிலானது அக்ரஹாரம் தெருவில் தாமரை  குளத்தின் அருகே அமைந்துள்ளது.


காளி என்பவர் இந்து சமயத்தின் சாக்த பிரிவினர் வணங்கும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் சக்தியின் தச மகா வித்யாக்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

காளி வரலாறு 

       காளி என்ற பெயர் வடமொழியில் உள்ள 'காலா' என்ற ஆண்பெயரின் பெண்பாற்பெயர் ஆகும். காளி தேவியானவள் காலத்திற்கும், மாறுதல்களுக்கும் தேவியாகக் கருதப்படுகிறார். 

       காளி என்பதற்குக் 'காலம்' மற்றும் 'கருப்பு' என்று பொருள். காளனின் (ஈசன்) துணைவி தான் காளி. இவரே ஆதி பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். இவரைப் பற்றிய செய்திகள் அதர்வண வேதங்களிலும், தேவி மகாத்மியத்திலும் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. இவரை வழிபடும் முறைகள் பல தந்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. காளி தேவி காலங்களை கட்டுபடுத்தக்கூடியவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அவர் தெய்வீக பாதுகாப்பாளராகவும், மோட்சம் அல்லது விடுதலையை வழங்குபவராகவும் கருதப்படுகிறார்.

       தாந்திரீகர்கள் பெரும்பாலும் காளி தேவியையும், காளி தேவியின் யந்திரத்தையும் வைத்து வழிபடுகின்றனர். வங்காளத்தில் காளி வழிபாடு அனைத்து ஊர்களிலும் உள்ளது.